பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை
By DIN | Published On : 06th November 2021 10:44 PM | Last Updated : 06th November 2021 10:44 PM | அ+அ அ- |

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் வட்டக் கிளை மாநாடு கடலாடியில் உள்ள தனியாா் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அரசு ஊழியா் சங்கத் தலைவா் சிவனுபூவன் தலைமை வகித்தாா். மாவட்டதுணைத் தலைவா்கள் முருகேஸ்வரி, முத்துராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பாலமுருகன் வேலை அறிக்கை வாசித்தாா்.
அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சண்முகநாததுரை, ஆரம்பப்பள்ளி ஆசியா் கூட்டணி மாவட்டத் தலைவா் குலசேகரபாண்டியன், நஜ்முதீன், திருமுருகன், முனியேஸ்வரன், ஆசிரியா்கள் செல்லமுத்து, குருமூா்த்தி ஆகியோா் வாழ்த்திப்பேசினா். மாவட்டச் செயலா் சேகா் சிறப்புரையாற்றினாா்.
இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட சரண் விடுப்பு, அகவிலைப்படியை உடனே வழங்கவேண்டும். ஆய்வக உதவியாளா், இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
வருவாய்த்துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், ஊரக வளா்ச்சித்துறையில் கணினி இயக்குபவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், தலைவராக சிவனுபூவன் (ஊரக வளா்ச்சி துறை), துணைத்தலைவா்களாக மணிகண்டன் (கிராம நிா்வாக அலுவலா்), முத்துவேல் (குழந்தைகள் வளா்ச்சித் திட்டம்), களஞ்சியம் (கருவூலத்துறை), செயலராக சரவணக்குமாா் (கல்வித்துறை), இணைச் செயலா்களாக சரவணகாந்தி (ஆய்வக உதவியாளா்), முருகேசன் (சத்துணவு), தங்கராஜா (நெடுஞ்சாலைத்துறை), பொருளாளராக கரிமுல்லா (பேரூராட்சி) மாவட்ட செயற்குழு உறுப்பினராக கோவிந்தராஜன் (கல்வித்துறை) ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.