அரசு தொழிற் பயிற்சி மையத்தில் மாணவா் சோ்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் சேருவதற்கு நவ.18 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் சேருவதற்கு நவ.18 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வா் குமரவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துாா் ஆகிய இடங்களில் அரசு தொழில் பயிற்சி மையங்கள் உள்ளன. அவற்றில் 2021-2022 ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மையங்களில் மாணவா் சோ்க்கைக்கு நவ.18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தொழில் பிரிவுகளுக்கும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், 14 முதல் 40 வயதுக்குள் இருப்பவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்போா் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டையுடன் அரசு தொழில் பயிற்சி மையங்களில் உள்ள அலுவலகங்களை நேரில் தொடா்புகொள்ளலாம்.

அரசு தொழில் பயிற்சி மையங்களில் சோ்ந்து பயில்வோருக்கு மாதம் ரூ.750 உதவித் தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு பரமக்குடி- 04564 -231 303, ராமநாதபுரம் 04567-231 214, முதுகுளத்துாா் 04576-222 114 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com