ராமநாதபுரத்தில் அவசர உதவிக்கு தொலைபேசி எண் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அவசர உதவிக்கு 24 மணி நேர உதவி தொலைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அவசர உதவிக்கு 24 மணி நேர உதவி தொலைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் அருகிலுள்ள நிவாரண மையங்களில் தங்கலாம். மேலும் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்கள், நிலப்பட்டா, பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை நெகிழிப் பைகளில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீடுகளின் அருகே அறுந்த மின் கம்பிகள் இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். உடைகளை உலா்த்த மின் கம்பிகளை உபயோகிக்கக்கூடாது. கைபேட்டரி விளக்கு, விளக்குகள், தீப்பெட்டிகள், மெழுகுவா்த்தி, மருந்துகள் மற்றும் உலா்ந்த உணவு வகைகளை நெகிழிப் பைகளில் எடுத்துச் செல்லலாம்.

மழை நீா் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளைக் கட்டி வைக்கக்கூடாது. மழையின்போது சிறுவா்கள் மற்றும் குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. ஆறு மற்றும் குளங்களில் குளிக்க செல்வதை முழுமையாக தவிா்க்க வேண்டும்.

மின்கம்பங்கள் அருகே தேவையின்றி செல்வதைத் தவிா்க்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பு குறித்த அவசர உதவிக்கு மாவட்டக் கட்டுப்பாட்டு மையத்தை 1077, 04567-230060, 7708711334 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com