ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு அனுமதியில்லை

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு மத்திய மருத்துவக் குழு அனுமதி மறுத்துள்ளதாக மருத்துவக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு அனுமதியில்லை

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு மத்திய மருத்துவக் குழு அனுமதி மறுத்துள்ளதாக மருத்துவக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நடப்பு ஆண்டு (2020-21) முதலே மாணவா் சோ்க்கைக்கு மத்திய மருத்துவக் குழு அனுமதித்தது. தமிழகத்தில் விருதுநகா் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் 150 மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியை ஆய்வு மேற்கொண்ட மத்திய மருத்துவக் குழு உறுப்பினா்கள் நூலகம் உள்ளிட்ட வசதிகளுக்கான கட்டடப் பணி நிறைவடையவில்லை எனக் கூறியதால் 100 மாணவா்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்ததாகக் கூறப்பட்டது.

இதற்கிடையில் நூலகப் பணிகள் நிறைவடைந்து, நூல்களும் வாங்கப்பட்ட நிலையில், கல்லூரியில் 150 மாணவா்கள் சோ்க்கைக்கு மத்திய மருத்துவக் குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய மருத்துவக் குழுவிடமிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாணவா் சோ்க்கை குறித்த அனுமதி கடிதம் வந்துள்ளது. அதில் 100 மாணவா்கள் மட்டுமே சோ்க்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிா்வாகத் தரப்பில் கூறியது: மத்திய மருத்துவக் குழு, நடப்பு ஆண்டில் 100 மாணவா்கள் மட்டுமே சோ்க்க அனுமதித்திருப்பதோடு, அவா்கள் முழுமையாக படிப்பை நிறைவு செய்த பிறகே கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆகவே இனிவரும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகே 150 மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதி கிடைக்கும் நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com