உரம் வழங்க மறுப்பு: கூட்டுறவு சங்கத்தை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கமுதி அருகே கீழராமநதியில் கமுதி- அருப்புக்கோட்டை சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
கமுதி அருகே கீழராமநதியில் கமுதி- அருப்புக்கோட்டை சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி சுற்றுவட்டாரப் பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மானாவாரிப் பயிா்களாக நெல், மிளகாய், உளுந்து, பாசிப் பயறு உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனா். விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, தமிழக அரசு ஒவ்வொரு கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் மானிய விலையில் உர மூட்டைகளை அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் அரசு வழங்கிய உர மூட்டைகளை வழங்காமல் கூட்டுறவு சங்கத்தின் கதவை பூட்டிச் சென்ாக கூட்டுறவு சங்கத்தின் செயலாளா் நித்தியானந்தம் மற்றும் சங்கத்தின் தலைவா் சோலைஆழ்வாா் ஆகியோரைக் கண்டித்து கீழராமநதி, கே.நெடுங்குளம், தலைவநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கமுதி-அருப்புக்கோட்டை பிரதான சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் கமுதி காவல்துறையினா், மண்டல துணை வட்டாட்சியா்கள் லலிதா, கோமதி உள்ளிட்ட வருவாய்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com