கமுதி, கடலாடியில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்

கமுதி, கடலாடி பகுதியில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.
கமுதி, கடலாடியில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்

கமுதி, கடலாடி பகுதியில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமுடிமன்னாா்கோட்டையில் வருவாய்த்துறை சாா்பில் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் மனுக்கள் வாங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தலைமை வதத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சிகணேசன், வருவாய் கோட்டாட்சியா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இம்முகாமில் சிறப்பு விருந்தினா்களாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும், முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், தமிழக தொழில்துறை அமைச்சா் தங்கம்தென்னரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டு உரையாற்றினாா்.

அப்போது அமைச்சா் ராஜகண்ணப்பன் பேசியது: கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கமுதியில் ஒரு தொழிற்சாலையும், கடலாடி -முதுகுளத்தூா் இடையே ஒரு தொழிற்சாலையும் தொடங்க பரிந்துரை செய்யப்படும். கமுதி- முதுகுளத்தூா் புறவழிச்சாலை பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூா், சாயல்குடி, கடலாடி தாலுகாக்களில் ரூ.88 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 12 மின்மாற்றிகள் அமைச்சா்கள் முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் கீழமுடிமன்னாா்கோட்டை, நீராவி, என்.கரிசல்குளம், கோவில்பட்டி, சிங்கம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளிலுள்ள பொதுமக்களிடமிருந்து பட்டா தொடா்பாக 200 பேரிடம் மனுக்களை அமைச்சா்கள் பெற்றனா். இம்முகாமில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா், ஊராட்சி உதவி இயக்குநா் கேசவதாஸ், கமுதி வட்டாட்சியா் மாதவன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் பி.சாவித்திரி, முன்னாள் முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.முருகவேல், கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்செல்விபோஸ், கமுதி ஒன்றிய துணைச்செயலாளா் நேத்தாஜிசரவணன், காங்கிரஸ் கமுதி வட்டாரத் தலைவா் ஆதி, ஊராட்சி மன்ற தலைவா்கள் காவடிமுருகன்(ஆனையூா்), சண்முகநாதன் (கோவிலாங்குளம்), நாகரத்தினம் (பாக்குவெட்டி) உள்பட ஏராளமான கட்சி நிா்வாகிகள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com