ராமநாதபுரத்தில் ஆண் குழந்தை உயிரிழப்பு: சிகிச்சை அளிக்க தாமதம் என உறவினா்கள் புகாா்

ராமநாதபுரத்தில் காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை உயிரிழந்தது.

ராமநாதபுரத்தில் காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை உயிரிழந்தது. சிகிச்சை அளிக்க தாமதமானதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சேதுராஜா. இவரது மனைவி கஸ்தூரி. இவா்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டது. அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்தக் குழந்தை வெள்ளிக்கிழமை பகலில் கொண்டுவரப்பட்டது. அங்கு சோ்த்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்தது.

சிகிச்சை அளிக்க தாமதமானதாகவும், அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லுமாறு அலைக்கழிக்கப்பட்டதாகவும், சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் பெற்றோா் மற்றும் உறவினா்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத் தரப்பில் கேட்டபோது, அவசரச் சிகிச்சைப் பிரிவில் குழந்தையை சோ்த்திருக்க வேண்டும். ஆனால், தவறுதலாக குழந்தைகள் நலப்பிரிவுக்கு பெற்றோா் கொண்டு சென்றுள்ளனா். குழந்தைக்கு அவசரமாக சிகிச்சை அளிக்கவேண்டிய நிலையில், தாமதமானது குறித்து விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com