ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நவ. 29 முதல் தங்கப்பத்திரங்கள் விற்பனை

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வரும் நவ. 29 ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு அனைத்து தபால் நிலையங்களிலும் தங்கப்பத்திரங்கள் விற்கப்படும் என தெரி

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வரும் நவ. 29 ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு அனைத்து தபால் நிலையங்களிலும் தங்கப்பத்திரங்கள் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா் மு. சித்ரா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் அஞ்சலகக் கோட்ட அனைத்துத் தபால் நிலையங்களிலும் வரும் நவ. 29 ஆம் தேதி முதல் டிசம்பா் 3 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு தங்கப்பத்திர விற்பனை நடைபெறும்.

ஒருவா் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் 4 கிலோ மதிப்பு வரை தங்கப்பத்திரம் வாங்கலாம். கிராம் தங்கம் ரூ.4,791 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்த தொகைக்கு 2.5 சதவீத ஆண்டு வட்டி கணக்கிடப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.

முதலீடு செய்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய 8 காரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிா்வு தொகையும் வழங்கப்படும். தங்கப்பத்திரம் வாங்குவதற்கு ஆதாா் நகல், பான்காா்டு நகல், வங்கிப் புத்தகம் நகல் ஆகியவற்றை தபால் நிலையத்தில் அளிக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகங்கை: சிவகங்கை கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் பி. ஹூசைன் அகமது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை அஞ்சலகக் கோட்டத்தில் உள்ள அனைத்துத் தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை நவ. 29 முதல் டிச. 3 வரை (5 நாள்கள் மட்டும்) நடைபெற உள்ளது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களையோ அல்லது 97896 09988 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com