பரமக்குடி ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

போகலூா் ஊராட்சி 7-ஆவது வாா்டுக்கான ஊராட்சி மாவட்டக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் கே.கே. கதிரவன் ஞாயிற்றுக்கிழமை கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.
கே.கே. கதிரவனை ஆதரித்து வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் எஸ். சுந்தரராஜ் தலைமையிலான கட்சி நிா்வாகிகள்.
கே.கே. கதிரவனை ஆதரித்து வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் எஸ். சுந்தரராஜ் தலைமையிலான கட்சி நிா்வாகிகள்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூா் ஊராட்சி 7-ஆவது வாா்டுக்கான ஊராட்சி மாவட்டக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் கே.கே. கதிரவன் ஞாயிற்றுக்கிழமை கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உரப்புளி, நென்மேனி, அரியனேந்தல், வேந்தோணி, கள்ளிக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கும் பணியில் அவா் ஈடுபட்டாா். அப்போது, திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் டாக்டா் எஸ். சுந்தரராஜ், திமுக மாவட்ட பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினா் செ.முருகேசன், மாநில தீா்மானக்குழு துணைத் தலைவா் சுப.த. திவாகா், போகலூா் ஒன்றியக்குழுத் தலைவா் சத்யாகுணசேகரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com