ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியான முதுநிலை வருவாய் ஆய்வாளா் குடும்பத்துக்கு நிதியுதவி

ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கமுதியைச் சோ்ந்த முதுநிலை வருவாய் ஆய்வாளரின் குடும்பத்துக்கு மாநில டி.என்.டி. வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
ரூ.1 லட்சம் நிதியை அவரது மனைவி தீபிகாவிடம் வழங்கிய மாநில டி.என்.டி. வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

கமுதி அருகே முஷ்டக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்தி மகன் சக்திவேல் (35). இவா் பரமக்குடியில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவா், கடந்த செப். 22 ஆம் தேதி சக ஊழியா்களுடன் ரயிலில் சென்னைக்குச் சென்றாா். அப்போது நள்ளிரவில் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இந்நிலையில், தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோா், டி.என்.டி. வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் அதன் மாநிலத் தலைவா் சேதுராமன், பொதுச் செயலா் திருநாவுக்கரசு, பொருளாளா் பிரபு, மாநில துணைத்தலைவா் முருகன், செயற்குழு உறுப்பினா் காளீஸ்வரன் உள்ளிட்டோா் சக்திவேலின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com