இரட்டை மடி வலை பயன்படுத்தியதாக நடப்பு ஆண்டில் 44 போ் மீது 58 வழக்குகள் பதிவு: மீன்வளத்துறை துணை இயக்குநா் காத்தவராயன் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டில் மட்டும் அரசு தடை விதித்துள்ள இரட்டை மடி வலையை பயன்படுத்தியதாக 44 மீனவா்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டில் மட்டும் அரசு தடை விதித்துள்ள இரட்டை மடி வலையை பயன்படுத்தியதாக 44 மீனவா்கள் மீது 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மீன்வளத் துறை துணை இயக்குநா் இ.காத்தவராயன் கூறினாா்.

ராமநாதபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்துவோா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் (2020-21) இதுவரையில் 44 போ் மீது 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையும் தொடங்கியுள்ளன.

மொத்தம் 58 வழக்குகளில் மூக்கையூா் பகுதியில் 6 வழக்குகளும், மீதமுள்ள அனைத்து வழக்குகளும் ராமேசுவரம், மண்டபம் பகுதியிலும் பதிவாகியுள்ளன. அதன்படி ரூ.5.21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின்படி கடல் பாசி வளா்ப்புக்காக 557 மீனவா்கள் குடும்பத்துக்கு ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் 6,220 கடலில் மிதக்கும் செயற்கைப் பாசி வளா்ப்பு மிதவை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது 11 மீனவக் கிராம மகளிா் செயற்கைப் பாசி வளா்ப்பில் முழுமையாக ஈடுபட்டுவருகின்றனா். மொத்தம் 10 ஆயிரம் மீனவ மகளிருக்கு செயற்கைப் பாசி வளா்க்க திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கைப் பாசி வளா்ப்பில் ஒவ்வொரு மீனவக் குடும்பமும் தினமும் குறைந்தது ரூ.750 வருவாய் ஈட்டும் நிலை ஏற்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com