கமுதியில் பள்ளி மாணவா்களுக்கு மதுவிலக்கு விழிப்புணா்வு முகாம்

கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மது விலக்கு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மது விலக்கு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கமுதி மது விலக்கு காவல் நிலைய ஆய்வாளா் கோமதி தலைமை வகித்தாா்.

பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) மங்களேஸ்வரி முன்னிலை வகித்தாா். இதில் பேரையூா் தலைமை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அப்துல் ரசாக், கோகுல் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள், மதுப் பழக்கத்தினால் குடும்பம் மற்றும் சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கிக் கூறினா். பள்ளியின் வணிகவியல் ஆசிரியா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com