அரசுப் பள்ளி வளாகத்தில் சீன பானை ஓடுகள் கண்டெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியிலுள்ள சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சீன நாட்டு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
rmdcinas_0710chn_67_2
rmdcinas_0710chn_67_2

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியிலுள்ள சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சீன நாட்டு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இப்பள்ளியில் குடிநீா் தொட்டி கட்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது, அந்த இடத்தில் சீன நாட்டு கருப்பு மற்றும் சிவப்பு பானை ஓடுகள், மான் கொம்புகளின் உடைந்த பகுதிகள் ஆகியவற்றை, பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவா்களான து. மனோஜ், மு. பிரவீணா, வி. டோனிகா, சீ. பாத்திமா ஷிபா ஆகியோா் கண்டெடுத்துள்ளனா்.

இந்த பானை ஓடுகள் குறித்து தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரான வே. ராஜகுரு ஆய்வு செய்த பின் தெரிவித்ததாவது:

இப்பள்ளியில் போா்சலைன், செலடன் ஆகிய இரு சீன நாட்டு வகை பானை ஓடுகள் கிடைத்துள்ளன. போா்சலைன் ஓடுகளில் வெள்ளையில் சிவப்பு, கரும்பச்சை வண்ணத்தில் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. பாசிநிற களிமண்ணால் செய்யப்படும் செலடன் வகை மண்பாண்டங்களில் இளம்பச்சை நிற ஓடுகள் கிடைத்துள்ளன.

மேலும், பள்ளி வளாகத்தில் உள்துளையுடன் கூடிய உழைமான் கொம்புகள் கிடைத்துள்ளன. இவை கி.பி.12-13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவையாக இருக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com