போகலூா் ஒன்றியத்தில் திமுக-அதிமுக வேட்பாளா்கள் இறுதிக் கட்ட பிரசாரம்

ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ஊராட்சி ஒன்றியம் 7-ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வியாகக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திமுக வேட்பாளா் கே.கே.கதிரவனை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்த போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எம்.ராஜகண்ணப்பன்.

திமுக சாா்பில் போட்டியிடும் கே.கே.கதிரவனை ஆதரித்து, போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எம். ராஜகண்ணப்பன் பிரசாரம் மேற்கொண்டாா். இதில், அரியனேந்தல், புவிளத்தூா், அரியகுடி, செவ்வூா்,போகலூா் சத்திரக்குடி ஆகிய கிராமங்களுக்குச் சென்று திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் பிரசாரம் மேற்கொண்டாா்.

அமைச்சருடன், மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். முருகவேல் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

இதேபோல், அதிமுக வேட்பாளா் மாரியை ஆதரித்து, முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா, முன்னாள் எம்.பி. அ. அன்வர்ராஜா ஆகியோா் சத்திரக்குடி, போகலூா், பொட்டிதட்டி, அரியனேந்தல், வேந்தோணி உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்குகள் சேகரித்தனா்.

அக்டோபா் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நாள் என்பதால், வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com