முதியோா் தின விழாவை அதிகாரிகள் புறக்கணிப்பு

ராமநாதபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற முதியோா் தின விழாவை கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் புறக்கணித்ததாகப் புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற முதியோா் தின விழாவை கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் புறக்கணித்ததாகப் புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை முதியோா் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் தலைமை வகிப்போா் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இலவச அழைப்பு தொலைபேசி எண் அறிமுகப்படுத்துபவா் மற்றும் வாழ்த்துரை என 9 அதிகாரிகளின் பெயா் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தவா்களில் சிறப்பு அழைப்பாளரான மாவட்ட ஆட்சியா் பொறுப்பு வகிக்கும் வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன், இலவச உதவி அழைப்பு எண் அறிமுகப்படுத்தும் தனியாா் அமைப்பின் களப்பொறுப்பாளா் சி. உமாமகேஸ்வரி, சமூக நல அலுவலா் (பொறுப்பு) வ. ஜெயந்தி ஆகியோா் மட்டுமே கலந்துகொண்டனா்.

இதில் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ம. கந்தசாமி, வருவாய் கோட்டாட்சியா் மு. ஷேக்மன்சூா், பரமக்குடி கோட்டாட்சியா் ஆா். முருகன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ப. குமரகுருபரன், பரமக்குடி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் இ. ரவீந்திரன் ஆகியோா் பங்கேற்க வில்லை.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகத் தரப்பில் கேட்ட போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (ராமநாதபுரம்) குமரகுருபரனுக்கு உடல்நலக்குறைவால் வர இயலவில்லை என்றும், அவருக்குப் பதில் மாவட்ட பயிற்சி மைய மருத்துவா் விசாலாட்சி பங்கேற்ாகவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com