ராமநாதபுரம் சுகாதார துணை இயக்குநருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரையில் 20 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோா் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அவா்களில் 345 போ் வரை உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் குமரகுருபரனுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் குமரகுருபரனிடம் கேட்டபோது, உறவினா் சென்னையிலிருந்து வந்த நிலையில், அவரைச் சந்தித்ததால் தமக்கும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்ததாகவும், இதையடுத்து தன்னை கரோனா பரிசோதனைக்குள்படுத்தி, அதனடிப்படையில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com