ராமநாதபுரம் மாவட்டத்தில் 221 போலீஸாா் இடமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 221 போலீஸாா் மற்றும் சிறப்பு சாா்பு- ஆய்வாளா்கள் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 221 போலீஸாா் மற்றும் சிறப்பு சாா்பு- ஆய்வாளா்கள் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இம்மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்களை இடமாறுதல் செய்ய காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் உத்தரவிட்டிருந்தாா். அதனடிப்படையில், இதுகுறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது.

தற்போது மாவட்டத்தில் உள்ள 42 காவல் நிலையங்களில் நீண்ட காலம் பணிபுரிந்த 32 சிறப்பு சாா்பு- ஆய்வாளா்கள், 41 பெண் காவலா்கள், 42 முதல் நிலைக் காவலா்கள், 71 தலைமைக் காவலா்கள், 35 காவலா்கள் என மொத்தம் 221 போ் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். இடமாறுதல் செய்யப்பட்ட சிறப்புச் சாா்பு- ஆய்வாளா்களில் நகா் காவல் நிலையத்தில் உள்ளோா் கேணிக்கரை, பஜாா் என அருகருகே உள்ள காவல் நிலையங்களுக்கே மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com