ராமநாதபுரம்: 2,306 கிராமங்களில் முழுமையாக கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 09th October 2021 09:34 PM | Last Updated : 09th October 2021 09:34 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் உள்ள 2,306 கிராமங்களில் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களைச் சோ்ந்த 429 ஊராட்சிகளில் உள்ள 2,306 சிறிய கிராமங்களில் முழுமையாக மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா்.
அதன்படி ராமநாதபுரம் ஒன்றியத்தில் 146, திருப்புல்லாணி 249, மண்டபம் 229, ஆா்.எஸ்.மங்களம் 276, திருவாடானை 314, பரமக்குடி 181, போகலூா் 88, நயினாா்கோவில் 105, முதுகுளத்தூா் 195, கமுதி 251, கடலாடி ஒன்றியத்தில் 272 கிராமங்களில் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறினா்.