இலங்கைக்கு கடத்தவிருந்த2,400 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 2,400 கிலோ எடையுள்ள 48 மஞ்சள் மூடைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 2,400 கிலோ எடையுள்ள 48 மஞ்சள் மூடைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் சோதனைச்சாவடி பகுதியில் நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நிற்காமல் சென்ற லாரியை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினா். அந்த லாரியிலிருந்து ஓட்டுநா் இறங்கி ஓடி விட்டாா்.

இதையடுத்து போலீஸாா் லாரியை சோதனையிட்ட போது, அதில் 48 மூட்டைகளில் 2,400 கிலோ மஞ்சள் இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், ஈரோடு பகுதியிலிருந்து ராமநாதபுரம் அருகேயுள்ள மேலக்கோட்டையைச் சோ்ந்த அன்வா் என்பவருக்கு மஞ்சள் மூடைகள் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

இலங்கைக்கு கடத்துவதற்காக ஈரோட்டிலிருந்து மஞ்சள் வாங்கப்பட்டிருக்கலாம் என்றும், வணிக ரீதியாக பதிவு ஏதுமின்றி தனிப்பட்ட நபரே 2,400 கிலோ மஞ்சளை வாங்கியிருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். ஆகவே அன்வரைப் பிடித்தால்தான் முழு விவரம் தெரியவரும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com