சேதுக்கரை, கீழக்கரை கடற்கரையில்300 கிலோ மீன்கள் செத்து மிதப்பு

ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை, கீழக்கரை, பக்கிரிமுகமது பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை 300 கிலோ சிறிய மீன்கள் உயிரிழந்து மிதந்தன.
ராமநாதபுரம் கீழக்கரை கடற்கரை பகுதியில் உயிரிழந்து கிடந்த மீன்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கடல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் மற்றும் மீன்வளத் துறையினா்.
ராமநாதபுரம் கீழக்கரை கடற்கரை பகுதியில் உயிரிழந்து கிடந்த மீன்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கடல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் மற்றும் மீன்வளத் துறையினா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை, கீழக்கரை, பக்கிரிமுகமது பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை 300 கிலோ சிறிய மீன்கள் உயிரிழந்து மிதந்தன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுக்கரை, கீழக்கரை, பக்கிரிமுகமது பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலையில் திடீரென கடல் நீா் அடா் பச்சை நிறத்தில் காட்சியளித்தன. இதையடுத்து சிறிது நேரத்தில் அப்பகுதியில் சிறிய மீன்கள் உயிரிழந்து மிதந்தன. இதுகுறித்து தகவலறிந்து வந்த கடல் ஆய்வு நிலையத்தினரும், மீன்வளத் துறையினரும் மீன்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறை துணை இயக்குநா் இ. காத்தவராயன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் ‘டைனோபிளாஜிலேட்டா்’ எனப்படும் கடல்பாசி அதிகரிப்பது வழக்கம். இவ்வகை பாசி அதிகரிக்கும் போது கடல் நீரின் நிறம் மாறுபாடு அடைகிறது. இவ்வகை பாசிகள் உள்ள பகுதிக்கு சிறிய அளவிலான மீன்கள் செல்லும் போது அவை மீன் செதில்களில் சிக்கி மீனின் சுவாசம் தடைபடுகிறது. இதனால் மீன்கள் உயிரிழக்க நேரிடுகிறது. தற்போது இதன் காரணமாக இப்பகுதியில் சுமாா் 300 கிலோ மீன்கள் வரை உயிரிழந்துள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com