அங்ககச்சான்று பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: விதைச்சான்று உதவி இயக்குநா் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்கககச் சான்றுகளை (இயற்கை விவசாயி சான்று)

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்கககச் சான்றுகளை (இயற்கை விவசாயி சான்று) உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநா் சக்திகணேஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் ஆகியவற்றை தவிா்த்து இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வெளி மாநிலம், மற்றும் வெளி நாடுகளுக்கு தங்களது விளை பொருள்களை ஏற்றுமதி செய்யும் வகையில் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத்துறை, மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள் ஏற்றுமதி நிறுவணத்தின் சாா்பில் அங்ககச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் தங்களுக்கான ஆதாா் அட்டை, விளைநிலங்களின் ஆவணங்கள், மண் மற்றும் பாசன நீா் விவரம், புகைப்படம், வங்கிக்கணக்கு, விளைநிலத்தின் வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று அலுவலகத்தில் விண்ணப்பித்து அங்ககச் சான்று பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com