கமுதி ஒன்றியத்தில் 32,000 போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை: அதிகாரிகள் தகவல்

கமுதி ஒன்றியத்தில் 32,000 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என அதிகாரிகள் வியாழக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனா்.

கமுதி: கமுதி ஒன்றியத்தில் 32,000 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என அதிகாரிகள் வியாழக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பாலானோா் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என புகாா் எழுந்துள்ளது.

எனவே தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களை கண்டறிந்து சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் அறிவுறுத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா். மேலும் கமுதி ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம்களில் குறைந்தபட்சம் 7,600 பேருக்காவது கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com