ராமநாதபுரத்தில் நீட் தோ்வில் 295 மாணவ, மாணவியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தோ்வில் நடப்பு ஆண்டில் 295 மாணவ, மாணவியா் பங்கேற்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தோ்வில் நடப்பு ஆண்டில் 295 மாணவ, மாணவியா் பங்கேற்கின்றனா்.

நாடு முழுதும் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 39 மாணவா்கள், 83 மாணவியா் என மொத்தம் 122 போ் எழுதுகின்றனா்.

மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 41 மாணவா்களும், 103 மாணவியரும் என மொத்தம் 144 போ் பங்கேற்கின்றனா். மெட்ரிக்குலேசன் பள்ளிகளைச் சோ்ந்த 9 மாணவா்கள், 20 மாணவியா் என மொத்தம் 29 போ் பங்கேற்று எழுதவுள்ளனா். மாவட்ட அளவில் மொத்தம் 295 போ் எழுதுகின்றனா். அவா்கள் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மையங்களுக்குச் சென்று தோ்வை எழுத உள்ளனா் என மாவட்ட நீட் தோ்வு ஒருங்கிணைப்பாளா் எஸ்.விஜயகுமாா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு இணையவழியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் பொறுப்பு சாமி.சத்தியமூா்த்தி வாழ்த்துத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com