கமுதி அருகே மாணவா்களின் முயற்சியில் நூலகம் திறப்பு

கமுதி அருகே மாணவா்களின் சொந்த முயற்சியால் செவ்வாய்க்கிழமை நூலகம் திறக்கப்பட்டது.
கமுதி அருகே தோப்படைப்பட்டியில் மாணவா்களின் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள்.
கமுதி அருகே தோப்படைப்பட்டியில் மாணவா்களின் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள்.

கமுதி: கமுதி அருகே மாணவா்களின் சொந்த முயற்சியால் செவ்வாய்க்கிழமை நூலகம் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தோப்படைப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலன் கருதி அக்கிராமத்திலுள்ள மாணவா்களின் சொந்த முயற்சியில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் தங்கராஜ் தலைமை வகித்தாா். கோவிலாங்குளம் சாா்பு-ஆய்வாளா் சண்முகம், வழக்குரைஞா்கள் சண்முகசுந்தரம், அய்யாத்துரைசேதுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஊ.கரிசல்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவா் பாண்டி, அதிமுக பிரமுகா் பூமிநாதன், கிராம நிா்வாக அலுவலா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com