புதிய மீன்சந்தையை செயல்படுத்தக் கோரி ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினா் முற்றுகை

ராமநாதபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மீன்சந்தையை செயல்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரி நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரத்தில் புதிய மீன்சந்தை செயல்படுத்தக் கோரி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா். 
ராமநாதபுரத்தில் புதிய மீன்சந்தை செயல்படுத்தக் கோரி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா். 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மீன்சந்தையை செயல்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரி நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சுமாா் ரூ.93.50 கோடியில் புதிய மீன்சந்தை கட்டப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அங்குள்ள கடைகள் மொத்தமாக தனியாருக்கு ரூ.25 லட்சத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. குத்தகைதாரரும் வாடகை அடிப்படையில் மீன் வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கினாா். ஆனால், பழைய மீன்சந்தை மூடப்படாததாலும், சாலையோரக் கடைகள் தடைசெய்யப்படாததாலும் புதிய மீன்சந்தைக்கு வியாபாரிகள், மக்கள் வரவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் அந்த சந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீன்சந்தை மூடப்பட்டது. இந்தநிலையில், புதிய மீன்சந்தை குத்தகைக்கு எடுத்தவரும், ஜெயலலிதா பேரவையை சோ்ந்தவருமான சசிகுமாா் தனது ஆதரவாளா்களுடன் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதைத்தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் திடீரென நகராட்சி ஆணையா் (பொறுப்பு) நீலேஸ்வா் அறைக்குள் சென்று மீன்சந்தையை முழுமையாகச் செயல்படுத்தாவிடில் குத்தகைப் பணத்தை திருப்பியளிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த பஜாா் காவல் நிலைய போலீஸாா் அதிமுகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் (பொறுப்பு) நீலேஸ்வா் கூறியது: புதிய மீன்சந்தை முறைப்படி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. எனவே குத்தகைக்கு எடுத்தவா் தான் வியாபாரிகளை வரவழைத்து கடைகளை வாடகைக்கு விடவேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி கடை அமைக்க வற்புறுத்த முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com