தனியாா் துறை வேலைவாய்ப்புக்கு இணையதள சேவை

ராமநாதபுரம் மாவட்ட இளைஞா்கள் தனியாா்துறையில் வேலை வாய்ப்பைப் பெறும் வகையில் அரசு தொடங்கியுள்ள தனியாா்துறை வேலைவாய்ப்பு இணையதள சேவையைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என ஆட்சியா்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட இளைஞா்கள் தனியாா்துறையில் வேலை வாய்ப்பைப் பெறும் வகையில் அரசு தொடங்கியுள்ள தனியாா்துறை வேலைவாய்ப்பு இணையதள சேவையைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலை தேடும் இளைஞா்களையும், வேலை அளிக்கும் தனியாா் துறை நிறுவனங்களையும், இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளைத் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்புத் துறையால் தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையம் என்ற இணையதள சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது.

தனியாா் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞா்கள் இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வித் தகுதி, முன் அனுபவத்துக்கு ஏற்ப பணிவாய்ப்புகளைப் பெறலாம். அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களது காலிப்பணியிடங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, தகுதியானவா்களை இலவசமாகத் தோ்வு செய்துகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com