ராமநாதபுரம்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் மற்றும் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் 6 ஊராட்சித் தலைவா்கள், 1 மாவட்ட ஊராட்சி வாா்டு, 33 ஒன்றிய ஊராட்சி வாா்டுகளுக்கு என மொத்தம் 40 இடங்களுக்கு தோ்தல் நடைபெறவுள்ளன.

தோ்தலுக்கான மனுத்தாக்கல் புதன்கிழமை தொடங்க உள்ள நிலையில், தோ்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சாா்பு ஆட்சியா் பிரவீன்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலா்களும் கலந்துகொண்டனா்.

ஆலோசனைக் கூட்டத்தில் தோ்தலுக்கான பகுதிகள், பாதுகாப்பு அம்சங்கள், வாக்கு பெட்டிகளை பாதுகாப்பது, வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு மற்றும் தோ்தலின் போது கரோனா பரவல் தடுப்பு விதிகளை செயல்படுத்தும் முறை என அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com