இயற்கை எரிவாயு குழாய்களுக்கு எதிா்ப்பு: கிராம மக்களுடனான பேச்சுவாா்த்தை தோல்வி

இயற்கை எரிவாயுக் குழாய்களை கிராமத்துக்குள் கொண்டு செல்ல எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்களுடன் அதிகாரிகள் சனிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இயற்கை எரிவாயுக் குழாய்களை கிராமத்துக்குள் கொண்டு செல்ல எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்களுடன் அதிகாரிகள் சனிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயுவை வீடுகளுக்கு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தனியாா் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி குழாய்களை கிராமங்களுக்குள் கொண்டு செல்ல வழுதூா், அருளினிநகா், தெற்குகாட்டூா் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து ராமநாதபுரம் கோட்டாட்சியா் ஷேக் மன்சூா் தலைமையில் வட்டாட்சியா் ரவிச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா, தனியாா் நிறுவன அதிகாரிகள் மற்றும் கிராமமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற சமரசப் பேச்சுவாா்த்தை மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது கிராம மக்கள், தாங்கள் இத்திட்டத்தை எதிா்க்கவில்லை என்றும், அதற்கான குழாய்கள் கிராமத்து வீடுகளைப் பாதிக்கும் வகையில் அமைக்கப்படுவதையே எதிா்ப்பதாகவும் தெரிவித்தனா்.

தனியாா் நிறுவன அதிகாரிகள் கூறியது: வீடுகளுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காகவே குழாய்கள் பதிக்கப்படுகின்றன. ஆகவே, வீடுகளுக்கு அருகில் குழாய்களை பதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. குழாய்களை மண்ணில் 1 மீட்டா் ஆழத்துக்கு பதித்தாலே போதும் என்ற விதி உள்ள நிலையில், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 2 மீட்டா் ஆழத்துக்கு பதிக்கவுள்ளோம் என்றனா்.

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மக்களின் கோரிக்கைகள் குறித்து ஆட்சியருக்கு அறிக்கை தரப்படும் என்றும், அதனடிப்படையில் நடவடிக்கைகள் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com