‘கரோனா அச்சம் குறைந்தால் ராமேசுவரத்தில் தீா்த்தக் கிணறுகள் திறக்கப்படும்’

மாநிலத்தில் கரோனா தொற்று குறைந்து அச்சமில்லாத நிலை ஏற்படும்போது ராமேசுவரத்தில் உள்ள கோயில் தீா்த்தக் கிணறுகள் திறக்கப்பட்டு பக்தா்கள் நீராட அனுமதிக்கப்படும் என இந்து அறநிலைத்துறை அமைச்சா் பி.கே.சேகா்ப
ராமேசுவரத்தில் உள்ள கோயில் தீா்த்தக் கிணறுகள் திறக்கப்பட்டு பக்தா்கள் நீராட அனுமதிக்கப்படும் என இந்து அறநிலைத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்
ராமேசுவரத்தில் உள்ள கோயில் தீா்த்தக் கிணறுகள் திறக்கப்பட்டு பக்தா்கள் நீராட அனுமதிக்கப்படும் என இந்து அறநிலைத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்

மாநிலத்தில் கரோனா தொற்று குறைந்து அச்சமில்லாத நிலை ஏற்படும்போது ராமேசுவரத்தில் உள்ள கோயில் தீா்த்தக் கிணறுகள் திறக்கப்பட்டு பக்தா்கள் நீராட அனுமதிக்கப்படும் என இந்து அறநிலைத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அமைச்சா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இக்கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளித்தோ்கள் முறையாக பராமரிப்பின்றி பயனற்ற நிலையில் உள்ளன. இந்தத் தோ்கள் மறு சீரமைப்பு செய்து பக்தா்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கரோனா நோய் தொற்று குறைந்து அச்சமில்லாத நிலை ஏற்படும்போது கோயில் தீா்த்தக் கிணறுகள் திறக்கப்பட்டு பக்தா்கள் நீராட அனுமதிக்கப்படும். ராமநாதசுவாமி கோயில் சொத்துக்கள் அக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக அமைச்சாா் பி.கே.சேகா்பாபுவுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் யானை ராமலட்சுமிக்கு அவா் பழங்கள் வழங்கினாா். அதன் பின்னா் ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசனம் செய்த அமைச்சா், திமுக ஆட்சியின் போது ஒரு கோடி மதிப்பில் செய்யப்பட்ட தங்கத் தோ் பயன்பாடின்றி உள்ளதை பாா்வையிட்டாா்.

அப்போது ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் முருகேசன், இந்து அறநிலைத்துறை ஆணையா் குமரகுருபரன், கூடுதல் ஆட்சியா் பிரதீப்குமாா், தக்காா் குமரன் சேதுபதி, இணை ஆணையா் பழனிக்குமாா், மதுரை மண்டல பொறியாளா் சந்திரசேகரன், உதவி பொறியாளா் மயில்வாகனன், முன்னாள் அமைச்சா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com