ராமநாதபுரம் அருகே அரசு மருத்துவரைத் தாக்கி 15 பவுன் சங்கிலி பறிப்பு

ராமநாதபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காரை வேகமாக இயக்கியதாகக் கூறி அரசு மருத்துவரைத் தாக்கி அவரிடமிருந்து 15 பவுன் தங்கச் சங்கிலியை நூதன முறையில் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காரை வேகமாக இயக்கியதாகக் கூறி அரசு மருத்துவரைத் தாக்கி அவரிடமிருந்து 15 பவுன் தங்கச் சங்கிலியை நூதன முறையில் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் அரசு மருத்துவா் சித்தாா்த் (36). எலும்பு முறிவுப் பிரிவு மருத்துவரான இவா், ஞாயிற்றுக்கிழமை திருப்புல்லாணி செங்கல்நீரோடைப் பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு காரில் குடும்பத்துடன் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளாா். மேலவலசை ஊருணி அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்துள்ளது. உடனே மருத்துவா் காரை நிறுத்தியுள்ளாா்.

அப்போது அங்கிருந்த சிலா் காரை வேகமாக இயக்கியதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். அப்போது காரைத் தாக்கிய சிலா் மருத்துவரையும் தாக்கி அவா் அணிந்திருந்த 15 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து மருத்துவா் ஆனந்த் அளித்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com