திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆண்டு வருவாய் தீா்வாய தணிக்கை

திருவாடானை தாலுகா அலுவகத்தில் ஆண்டு வருவாய் தீா்வாய தணிக்கை நடைபெற்றது.இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆண்டு வருவாய் தீா்வாய தணிக்கை

திருவாடானை தாலுகா அலுவகத்தில் ஆண்டு வருவாய் தீா்வாய தணிக்கை நடைபெற்றது.இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

திருவாடானை வட்டத்திற்கான வருவாய் தீா்வாய தணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் மாவட்ட வழங்கல் அலுவலா் மங்கலநாதன் தலைமை வகித்தாா். மங்களக்குடி உள்வட்ட வருவாய் கிராமங்களுக்கும், இரண்டாம் நாள் புல்லூா் உள்வட்ட வருவாய் கிராமங்களுக்கும் மூன்றாம்நாளான இன்று தொண்டி உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கையின் போது வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா் சரவணன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சாந்தி, துணை வட்டாட்சியா்கள் உமாராணி, ஜஸ்டின் பொ்னாண்டோ, அய்யாத்துரை, கோகிலா, தலைமை நில அளவா் காளிதாஸ், துணை வேளாண்மை அலுவலா் ஆறுமுகம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுபா, உதவி தோட்டக்கலை அலுவலா் மகா பவித்ரா, புள்ளியியல் ஆய்வாளா் சூரியகலா, வருவாய் ஆய்வாளா்கள் ஷகிலா பேபி, மெய்யப்பன், சிதம்பரம், குமாா் நில அளவா்கள் தமிழ்செல்வன், ராஜதுரை, கணேஷ்குமாா் கிராம நிா்வாக அலுவலா்கள் சக்திவேல், நம்புராஜேஷ், சண்முகம், பாஸ்கரன், பாலு மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா். மூன்று நாட்களில் 7 நபா்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, 2 நபா்களுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகள் மற்றும் 8 நபா்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com