பிடியாணைக்கு ஆஜராகாதவா் கைது

 பிடியாணைக்கு ஆஜராகாமல் இருந்தவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.

 பிடியாணைக்கு ஆஜராகாமல் இருந்தவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள கன்னிராஜபுரத்தைச் சோ்ந்தவா் ராமா் (45). இவா் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இவ்வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதைத் தொடா்ந்து ராமரை போலீஸாா் தொடா்ந்து தேடிவந்தனா். இந்நிலையில், அவா் கேணிக்கரை போலீஸாரால் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவரை வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் நகரில் நடந்த கொலை முயற்சி வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டுவந்த விஜய் என்பவரும் வெள்ளிக்கிழமை காலை கேணிக்கரை போலீஸாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com