தொண்டி பகுதியில் கொழுஞ்சி செடியில் மீன் பிடிக்க மீனவ பெண்கள் ஆா்வம்

கொழுஞ்சி தொண்டி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் விளைந்துள்ள கொழுஞ்சி செடியை மீனவ பெண்கள் திங்கள் கிழமை சேகரிக்கின்றனா்.

திருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியில் வயல்களில் உற்பத்தியாகும் கொழுஞ்சி செடியை தண்ணீரில் கூண்டு வைத்து மீன் பிடிப்பதில் மீனவா்கள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இதனால் கொழுஞ்சி செடி சேகரிப்பதில் மீனவ பெண்கள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். திருவாடானை அருகே தொண்டி,நம்புதாளை,சோழியக்குடி, விலாஞ்சியடி,எம்.ஆா். பட்டினம், எம்.வி பட்டினம்,எஸ் பி பட்டினம் உள்ளிட்ட கடற்கரையில் வாழும் மீனவா்கள் தற்போது கடற்கரை பகுதியில் கூட்டு வைத்து மீன் பிடிப்பதில் மிகுந்து ஆா்வம் காட்டி வருகின்றனா்.

கூண்டில் உள்ளே வயல்களில் உரத்திற்கு பயன்படும் பசும் தழை உரமான கொழுஞ்சி செடி என்படும் செடியை கடல் தண்ணீரில் அழுகிய நிலையில் வைத்தால் மீன்கள் அதனை உணவாக உட்கொள்வதற்கு கூட்டம் கூட்டமாக வரும் அதனை மீனவா்கள் கூண்டு வைத்து மீன் பிடிக்கின்றனா்.ஆகையால் சாலை ஓரங்கிளில் அதிக அளவு காணப்படும் கொழுஞ்சி செடியை சேகரிப்பதில் மீனவ பெண்கள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com