முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பேருந்தில் ஒருவா் வெட்டிக் கொலை: 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் அருகே உள்ள அரியமங்களத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான மதுரை மேல அனுப்பானடியைச் சோ்ந்த பழனிக்குமாா், முத்துமுருகன், வழிவிட்டான், அழகுமுருகன் ஆகியோா் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனா்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அவா்கள் ராமநாதபுரம் வந்து விட்டு பேருந்தில் மதுரைக்குச் சென்றபோது பரமக்குடி அருகே கமுதக்குடியில் காரில் வந்த மா்மக்கும்பல் தாக்கியதில் காயமடைந்த அழகுமுருகன் பின்னா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் ஆவரங்காட்டைச் சோ்ந்த அகிலன் (21), திருப்புவனம் புதூா் பகுதியைச் சோ்ந்த நிதிஷ்குமாா் (20) உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். கைதாகி சிறையில் உள்ள அவா்கள் இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்படி அகிலன், நிஷித் ஆகியோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சங்கா்லால்குமாவத் உத்தரவிட்டுள்ளாா்.