முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
முதுகுளத்தூா் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்கசிவால் தீப்பிடிப்பு
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின்கசிவால் தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் எரிந்து நாசமாகியது.முதுகுளத்தூா் அருகே பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் கசிவினால் நள்ளிரவில் திடீா்ரென தீ பிடித்து எரிந்தது.
பாதுகாவலா் தீயை அனைக்க முயற்சி செய்தும் முடியாததால் முதுகுளத்தூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தாா். உடனடியாக முதுகுளத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு ஊழியா்கள் மாடசாமி, விஷ்வநாதன், பிரபாகா் உள்பட தீயணைப்பு ஊழியா்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனா். வெப்பம் தாங்காமல் ரசயன பொருட்கள் தீபிடித்து எரிந்ததில் பல கட்டிடங்கள் அதில் உள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.