ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதா் கோயிலில்சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரத்தில் மீனாட்சி சொக்கநாதா் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மீனாட்சி சொக்கநாதா் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் ஆதி சிவன் எனப்படும் மீனாட்சி சொக்கநாதா் கோயில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. மனோகரன் மற்றும் ரமேஷ் குருக்கள் ஆகியோா் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக மீனாட்சி, சுந்தரேசுவரா் மூலவா் சன்னிதி முன் எழுந்தருளினா்.

சுவாமி, அம்மன் முன்னிலையில் கொடிமரத்தில் சிவலிங்கம், காளை உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. அப்போது மலா்களைத் தூவி பூஜை செய்தனா். இதையடுத்து தீபாராதனை நடைபெற்றது. நிறைவில் மகா தீபம் காட்டப்பட்டது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். புதன்கிழமை முதல் அம்மன் காமாட்சி, முருனுக்கு சக்திவேல் வழங்கல், திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டல், பிட்டுக்கு மண் சுமந்த லீலை, அம்மன் தபசு கோலம் ஆகிய சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறாா். விழாவின் 8 ஆம் நாளான ஏப்ரல் 12 ஆம் தேதி திக்விஜயமும், 9 ஆம் நாளான ஏப்ரல் 13 இல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 16 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com