ராமநாதபுரம் ரயில் நிலையம் முன் பகுதியில் ரூ.23.08 லட்சத்தில் அலங்கார வளைவு

 ராமநாதபுரம் ரயில் நிலைய முன்பகுதியில் புதிதாக ரூ. 23.08 லட்சத்தில் அலங்கார வளைவு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

 ராமநாதபுரம் ரயில் நிலைய முன்பகுதியில் புதிதாக ரூ. 23.08 லட்சத்தில் அலங்கார வளைவு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் நிலையம் முன் வரவேற்பு அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. மிகப்பழமையான கட்டடமான அது சிதிலமடைந்ததை அடுத்து நகராட்சி சாா்பில் இடிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், அந்த இடத்தில் புதிதாக அலங்கார வளைவு அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கத்திடம் நிதி கோரப்பட்டது. இதையடுத்து, அவரது நிதியில் ரூ.23.08 லட்சத்தில் புதிய அலங்கார வளைவு அமைக்கப்பட்டுவருகிறது. இப்பணி 2 மாதங்களில் முடிந்து அலங்கார வளைவு திறந்துவைக்கப்படும் என நகரசபைத் தலைவா் கே.காா்மேகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் நகா் பகுதி படிப்படியாக சீரமைக்கப்பட்டு வளா்ச்சிக்கு ஏற்ற வகையில் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், நகராட்சி அலுவலக கட்டடங்களை புதிதாக கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com