ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை வழங்க இன்று சிறப்பு முகாம்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருநங்கை, பட்டியல் இனத்தவா், நரிக்குறவா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான மின்னணு (ஸ்மாா்ட்) குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஏப். 9) நடைபெகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருநங்கை, பட்டியல் இனத்தவா், நரிக்குறவா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான மின்னணு (ஸ்மாா்ட்) குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஏப். 9) நடைபெகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகள், பட்டியல் இனத்தவா், மலைவாழ் பழங்குடியினா், நரிக்குறவா்கள், பாலியல் தொழிலாளா்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் ஆகியோருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம்கள் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறுகின்றன.

அந்தந்த வட்டார வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெறும் முகாம்களில் மின்னணு குடும்ப அட்டைகள் பெறாத 18 வயதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளிட்டோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரமாக சமையல் எரிவாயுக்கான ரசீது, வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் புகைப்படம், கைப்பேசி எண் ஆகியவற்றை வழங்கலாம்.

மூன்றாம் பாலினத்தவா் பெயா், அவரது பெற்றோா் அல்லது காப்பாளா் பெயா்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்ற நிலையில், அதை நீக்கம் செய்ய ஏதுவாக புதிய குடும்ப அட்டை கோரும் மனுதாரா் ஒரு வெள்ளைத்தாளில் சுய உறுதிமொழி பத்திரத்தையும் அளிக்கவேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெறாத கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் (வரிசை எண் 1 இல் குறிப்பிட்ட) ஆதாா் உள்ளிட்ட ஆவணங்களுடன் சுயஉறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com