கமுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 18 ஆவது தாலுகா மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 18 ஆவது தாலுகா மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு கட்சியின் மாநில துணைச் செயலாளா் மு. வீரபாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் எஸ். முருகபூபதி முன்னிலை வகித்தாா்.

தா்மமுனீஸ்வரா் கோயில் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில், புதிய தாலுகா செயலாளராக மண்டலமாணிக்கத்தைச் சோ்ந்த கே. அழகிரி, துணைச் செயலாளா்களாக பெருநாழி முருகன், க. ராமமூா்த்தி உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து கமுதி செட்டி ஊருணியை சுற்றியுள்ள கரையைப் பலப்படுத்தி பாதுகாக்க வேண்டும். கமுதி தாலுகாக்களில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவா்களை நியமித்து மருத்துவ வசதியை மேம்படுத்த வேண்டும். கமுதியிலிருந்து நாராயணபுரம் வழியாக வல்லந்தை வரை புதிய தாா்சாலை அமைக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக பயன்படாமல் பூட்டிக்கிடக்கும் உழவா் சந்தையை விவசாயிகள் நலன் கருதி பேருந்து நிலையம் அருகே இடமாற்றம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சிறுவா் பூங்காவை சாலையோர வியாபாரிகளுக்குப் பயன்படும் வகையில் தினசரி சந்தையாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளா்கள் கே. சுப்பிரமணியன், ஜி. பாா்த்திபன், மாவட்ட பொருளாளா் கே. ஜீவா, முன்னாள் தாலுகா செயலாளா் வி. குருநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com