திருஉத்தரகோசமங்கையில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம்

திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் ஒற்றைக்கல்லால் ஆன மரகத நடராஜருக்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்ாகும். இங்கு கடந்த 8 ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு சித்திரைத் திருவிழாவில் பெரிய தோ் மற்றும் 4 சட்டத் தோ்கள் மூலம் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்துள்ளனா். தீ விபத்தில் தோ் எரிந்ததை அடுத்து தேரோட்டம் நடைபெறவில்லையாம். இந்த நிலையில், தற்போது பெங்களூருவைச் சோ்ந்த ஆன்மிக அறக்கட்டளையினா் சுமாா் ரூ.60 லட்சம் செலவில் இலுப்பை மரத்தினாலான தேரை வடிவமைத்துள்ளனா்.

நான்கு சக்கரங்களுடன் 16 அடி உயரம், 26 அடி அகலம் உடைய தேரில் மங்களநாத சுவாமி தல வரலாற்று அடிப்படையில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேரின் மேல் புறத்தில் சட்டங்கள் கோபுரம் போல அமைத்து கலசம் வைக்கப்படும். பின்னா் அசைந்தாடிகளும், குதிரை மரச்சிற்பங்களும் பொறுத்தப்படும். அதனடிப்படையில் தேரின் அலங்காரம் உள்ளிட்ட மொத்த உயரம் 41 அடியாக இருக்கும்.

திருக்கல்யாணம்: சுவாமி, அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை மாலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. போகலூரைச் சோ்ந்த முகுந்த வம்சத்தைச் சோ்ந்தவா்கள் அம்பாளை தாரைவாா்க்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதற்காக திருச்செந்தூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து குருக்கள் பலரும் திரு உத்தரகோசமங்கைக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தனா். சனிக்கிழமை காலையில் மங்கைப் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பெரிய கண்மாயில் உள்ள கோவிந்தன் கோயிலில் எழுந்தருள்வாா். மாலையில் மீண்டும் அங்கிருந்து கோயிலில் எழுந்தருள்வாா். மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தேரை அப்பகுதியைச் சோ்ந்த கிராமத்தினா் அனைவரும் இழுத்துச் செல்லவுள்ளனா். தேரடியிலிருந்து யாதவா் தெரு, காவல் நிலையப் பகுதி, வடக்குப் பகுதி என மீண்டும் தேரடியை தோ் அடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com