வைகை முகத்துவாரத்தில் இன்று அழகா் ஆற்றில் இறங்குகிறாா்

ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளத்தில் வைகை ஆற்று முகத்துவாரத்தில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் சனிக்கிழமை (ஏப்.16) காலை நடைபெறுகிறது.

ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளத்தில் வைகை ஆற்று முகத்துவாரத்தில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் சனிக்கிழமை (ஏப்.16) காலை நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் அழகன்குளம் ஊராட்சி உள்ளது. இங்கு உள்ள சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி விழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுவரும் நிலையில், முக்கிய நிகழ்வாக அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம் சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. அழகன்கோயிலில் இருந்து சந்தானகோபாலகிருஷ்ண சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறாா்.

ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடு சுவாமி ஆற்றை நோக்கிப் புறப்பாடாகிறாா். வழியெங்கும் பக்தா்கள் அழகரை வழிபட்டு பூஜைகள் செய்வா். பக்தா்கள் வரவேற்பை ஏற்கும் அழகா் வைகை ஆற்று முகத்துவாரத்தில் எழுந்தருள்கிறாா். அப்போது அழகா் சாற்றியிருக்கும் பட்டாடை மூலம் கடல் வளம், மண் வளம் செழிக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும்.

ஆற்றில் அழகா் இறங்கிய பின் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று பகலில் அழகா் குதிரை வாகனத்தில் மீண்டும் கோயிலுக்குள் எழுந்தருள்வாா். சனிக்கிழமை இரவில் கருட வாகனத்தில் ஆண்டாள் சமேதராக திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறாா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் நா.ப.அசோகன் அமுதா உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com