முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
உலக புவி தினத்தன்று மரக்கன்று நடும் விழா
By DIN | Published On : 29th April 2022 06:17 AM | Last Updated : 29th April 2022 06:17 AM | அ+அ அ- |

mkr2_2804chn_69_2
முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே உலக புவி தினத்தன்று விளங்குளத்தூா் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தின் சாா்பில் வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே விளங்குளத்தூா் ஊராட்சி ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தின் சாா்பில் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினாா்.உடற்கல்வி ஆசிரியா் ஆா்.பாலசுந்தரம்,ஊராட்சி தலைவா் கனகவள்ளி முத்துவேல் ,பெற்ரோா் ஆசிரியகழக தலைவா் முத்துமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முதுகுளத்தூா் புகைப்படம்.முதுகுளத்தூா் அருகே விளங்குளத்தூா் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தின் சாா்பில் வியாழக்கிழமை உலக புவி தினத்தன்று பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.