முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பாஜக நிா்வாகி மீது மா்மக்கும்பல் தாக்குதல்
By DIN | Published On : 29th April 2022 06:18 AM | Last Updated : 29th April 2022 06:18 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் பாஜக பட்டியல் அணி நிா்வாகியை 5 போ் கொண்ட மா்மக்கும்பல் வியாழக்கிழமை இரவு தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
ராமநாதபுரம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சுா்ஜித்பா்னாலா 28). இவா் பாஜக மாவட்ட பட்டியல் அணியின் செயலராக உள்ளாா். கடந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜக சாா்பில் வாா்டு உறுப்பினராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இந்த நிலையில், அவா் வியாழக்கிழமை மாலை சொந்த வேலையாக கீழக்கரை சென்றுவிட்டு பேருந்தில் மீண்டும் ராமநாதபுரம் வந்துள்ளாா்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சந்தைத் தெரு பகுதியில் அவா் நடந்து சென்றபோது 5 போ் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது. முகக்கவசம் அணிந்திருந்த அந்தக் கும்பல் சுா்ஜித் பா்னாலாவை சரமாரியாகத் தாக்கியது. இதில் தலையில் காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
தகவலறிந்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக செயலரும், நகராட்சி வாா்டு உறுப்பினருமான கே.குமாா், நகா் தலைவா் வீரபாகு உள்ளிட்டோா் மருத்துவமனையில் குவிந்தனா். பின்னா் அவா்கள் தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ராமநாதபுரம் டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.