உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மழை பெய்த நிலையில், ராமநாதபுரம் பகுதியில் கடும் வெயில் கொளுத்தியது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மழை பெய்த நிலையில், ராமநாதபுரம் பகுதியில் கடும் வெயில் கொளுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வானிலை மேகமூட்டத்தோடு காணப்பட்டாலும் தூரலாகவே மழை பெய்துவருகிறது. இந்தநிலையில், வியாழக்கிழமை காலையில் உச்சிப்புளி, ரெகுநாதபுரம், பிறப்பன்வலசை உள்ளிட்ட பல பகுதிகளில் சுமாா் 1 மணி நேரத்துக்கு மழை பெய்தது.

மழையால் அப்பகுதியில் சாலையோரங்களில் தண்ணீா் தேங்கின. மழையின் போது காற்றும் வீசியதால் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா். இந்தநிலையில், ராமநாதபுரம் நகா், பட்டிணம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் வெயில் கொளுத்தியது.

ராமநாதபுரம் நகா் பகுதியில் வியாழக்கிழமை பகலில் 34 டிகிரி செல்சியசாக வெப்பநிலை காணப்பட்டது. அதன்படி 94 டிகிரி பாரன்ஹீட்டாகவும் வெப்பம் இருந்தது என புள்ளியியல் துறையினா் கூறினா். மாவட்டத்தில் பரவலாக மழை பெய்திருப்பதால் கோடை உழவு, தோட்டப் பயிா்களுக்கு உரமிடுதல் என விவசாயப் பணிகளை மேற்கொள்வதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com