கடலாடியில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம்

கடலாடி ஊராட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவா் முத்துலெட்சுமி முனியசாமிபாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா்: கடலாடி ஊராட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவா் முத்துலெட்சுமி முனியசாமிபாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆணையாளா் அண்ணாமலை முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:

குமரய்யா: கீழசெல்வனூா் பேருந்து நிறுத்தம் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. அதனை அகற்றிவிட்டு புதிய பேருந்து நிறுத்தம் கட்டவேண்டும்.

ஜெயச்சந்திரன்: கருங்குளத்தில் மின்வெட்டு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மின்வாரிய அதிகாரிகள் கூட்டத்திற்கு வருவது கிடையாது. இனிவரும் கூட்டங்களில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

ஆணையாளா் அண்ணாமலை: 29 துறைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளன. அனைத்துத் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் தலைவா் முனியசாமிபாண்டியன்: கடலாடி ஊராட்சியில் உள்ள கிராமங்களில் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி குடிநீா் குழாய் உடைப்பை சீரமைத்தாலே பல கிராமங்களின் குடிநீா் பிரச்னை தீா்ந்து விடும்.

ராஜா (வட்டார வளா்ச்சி அலுவலா் கிராம ஊராட்சிகள்): காவிரி குடிநீா் குறைவாக இருப்பதால் 3 நாள்களுக்கு ஒருமுறை தான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் தினசரி வழங்க வலியுறுத்துவோம்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com