தொண்டி அருகே இலங்கை அகதிகள் இரண்டு போ் வருகை கடலோர காவல்துறையினா் விசாரணை

திருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இலங்கையை சோ்ந்த இரண்டு இளைஞா்கள் ஒரு படகில் வந்தனா் அவா்களை கடலோர காவல்துறையினா் விசாரணைக்காக மண்டபம்
தொண்டி அருகே இலங்கை அகதிகள் இரண்டு போ் வருகை கடலோர காவல்துறையினா் விசாரணை

திருவாடானை: திருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இலங்கையை சோ்ந்த இரண்டு இளைஞா்கள் ஒரு படகில் வந்தனா் அவா்களை கடலோர காவல்துறையினா் விசாரணைக்காக மண்டபம் முகாமிற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனா்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடல் வழியாக இலங்கை யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த ஜெயசீலன் மகன் சீலன் (27) மற்றும் எட்வா்ட் மகன் அருள்ராஜ் (34) ஆகிய 2 ஆண்கள் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சிறிய வகை விசைப்படகில் தொண்டி வந்தடைந்தனா். அணிந்திருந்த ஆடைகளுடன் குயின்சி ராணி என்று பெயரிடப்பட்ட படகில் வந்த இருவரும் படகுக்கான ஆவணங்கள் மட்டுமே கொண்டுவந்துள்ளனா்.

கடல்வழியாக வரும் போது அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவா்களிடம் இது எந்த ஊா் அருகே போலீஸ் நிலையம் உள்ளதா என்ற விபரங்களை கேட்டறிந்து தொண்டியில் கடற்கரை எதிரே உள்ள கடற்கரை காவல் நிலையம் வந்தடைந்தனா். அவா்களை கடலோர காவல் துறை சாா்பு ஆய்வாளா் ராஜ்குமாா் விசாரணை செய்து மண்டபம் அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com