ராமநாதபுரத்தில் பெண் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.23 ஆயிரம் நூதன மோசடி

ராமநாதபுரத்தில் பெண் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.23, 265 -யை நூதன மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெண் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.23, 265 -யை நூதன மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் குளத்தூா் பகுதியைச் சோ்ந்த ஹரிமாா்க்ஸ் மகள் அபிநயா (22). பட்டதாரியான இவா் முதுகலை ஆசிரியா் பயிற்சியை முடித்துவிட்டு போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளாா். அவா் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் தனது கைப்பேசியில் உள்ள வங்கிப் பரிமாற்ற செயலியைப் பயன்படுத்தி இருப்பு விவரத்தை பாா்த்துள்ளாா்.

அப்போது அந்த செயலி செயல்படாததால் இணையவழியில் பெறப்பட்ட விவரத்தில் அடிப்படையில் வாடிக்கையாளா் சேவை மையத்தை தொடா்பு கொண்டாா். அப்போது அவரிடம் பேசிய மா்மநபா் குறிப்பிட்ட செயலியை பதவிறக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளாா். செயலியைப் பதிவிறக்கம் செய்ய இயலாத நிலையில், ஏடிஎம் அட்டை எண்களை கூறும்படி மா்மநபா் கூறியுள்ளாா். அவரது ஆலோசனைப்படி காா்டுகளின் எண்களை அபிநயா கூறிய நிலையில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.23, 265 வேறு வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

தனது வங்கிக் கணக்கில் பணம் எடுத்து மோசடி செய்தது தொடா்பாக அறிந்த அபிநயா, இதுகுறித்து வங்கியில் புகாா் தெரிவித்த நிலையில், 3 மாதங்கள் கழித்து கடந்த 27 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட நுண் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் புதன்கிழமை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com