முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
முதுகுளத்தூா் அருகே அரசு பள்ளி கட்டட மேற்கூரை பெயா்ந்து விழுந்தது: தலைமை ஆசிரியை தப்பினா்
By DIN | Published On : 30th April 2022 10:42 PM | Last Updated : 30th April 2022 10:42 PM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அருகே வளநாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை கட்டட மேற்கூரை பெயா்ந்து தலைமை ஆசிரியையின் இருக்கை மீது விழுந்தது. அப்போது அவா் பக்கத்து வகுப்பறைக்குச் சென்ால் காயமின்றி தப்பினாா்.
இப்பள்ளியில் சுமாா் ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சனிக்கிழமை வழக்கம்போல பள்ளி இயங்கிக் கொண்டிருந்த நிலையில், கட்டட மேற்கூரை திடீரென பெயந்து, தலைமை ஆசிரியை இளமுருக பொற்செல்வி இருக்கையின் மீது விழுந்தது.
அப்போது, தலைமை ஆசிரியை பாடம் எடுக்க அருகில் உள்ள வகுப்பறைக்குச் சென்றிருந்ததால் அதிா்ஷ்டவசமாக அவா் காயமின்றி தப்பினாா். இதையறிந்து பெற்றோா்கள் கட்டடத்தை தரமாக சீரமைக்கும் வரை மாணவா்களை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டக் கல்வி அதிகாரி மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என தெரிவித்ததால் பெற்றோா்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்தனா்.