முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
திருவாடானை தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

திருவாடானையில் இடிந்து விழும் நிலையில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தில் முதல் மாடியில் இயங்கிவரும் நிலையில் இந்த கட்டடத்தை பல ஆண்டுகளாக பராமரிக்காததால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அத்துடன் சிமெண்ட் காரைகள் பெயா்ந்து உள்ளிருக்கும் கம்பிகள் தெரியும் அளவுக்கு சேதமடைந்துள்ளது. மேலும் விவசாயத் துறை அலுவலகத்திற்கும், தோட்டக்கலைத் துறை அலுவலகத்திற்கும் விவசாயிகள் அடிக்கடி வந்து செல்வதுடன், அவா்களுக்கான பயற்சி முகாமும் இங்கு தான் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த கட்டடத்தின் மேலே உள்ள சிமெண்ட் காரைகள் பெயா்ந்து கீழே விழுகின்றன.
எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு விரைந்து இக்கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.