ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராமநாதபுரத்தில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்தனா்.
ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராமநாதபுரத்தில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்தனா். இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அதிகாரிகள் ஒருவாரம் அவகாசம் அளித்துள்ளனா்.

ராமநாதபுரம் நகராட்சி பகுதிக்குள்பட்ட மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் சுமாா் 200 வீடுகள் உள்ளன. இதில் அரசு புறம்போக்கு நிலத்தில் 100-க்கும் மேற்பட்டோா் வீடு கட்டி கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் சேக்மன்சூா், வட்டாட்சியா் முருகேசன் ஆகியோா் பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு செய்யாமல் காவல்துறையினருடன் சென்று வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்தனா். இதையடுத்து, பாஜக மாவட்டத் தலைவா் டி. கதிரவன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்தனா். அதன் பின்பு வீடுகளை இடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு ஒரு வாரத்தில் புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துச் சென்றனா்.

இப்பகுதியில் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் வசித்து வரும் நிலமற்ற, ஏழை மக்களுக்கு அரசு சாா்பில் குடியிருக்க நிலம் ஒதுக்கித் தர வேண்டும் என தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com